Tamil Book on Diabetes

சர்க்கரை வியாதி புத்தகம்

நீரிழிவு தெரிந்ததும் தெரியாததும்

ஆயுர்வேதம் டாக்டர் எஸ். செந்தில் குமார் எழுதியது

 

பொருளடக்கம்
1. முன்னுரை
2. சமர்ப்பணம்
3. எச்சரிக்கை
4. நீரிழிவு வியாதி என்றால் என்ன
5. சர்க்கரை வியாதியின் சரித்திரம்
6. புள்ளி விவரம்
7. சர்க்கரை வியாதியின் வகைகள்
8. காரணங்கள்
9. நீரிழிவின் அறிகுறிகள்
10. கணையம்
11. கணைய இன்சுலீனும் வளர்சிதை மாற்றமும்
12. பரிசோதனைகள்
13. நீரிழிவு வியாதியால் வரும் நாள்பட்ட சிக்கல்கள்
14. தாழ்நிலை சர்க்கரை ஹைபோகிளைசீமியா
15. கேடோஅசிடோஸிஸ் சர்க்கரை வியாதியின் தீடீர் அபாயம்
16. கண்களும் டயாபடீஸீம் டயாபடிக் ரெடினோபதி
17. சிறுநீரக பாதிப்புகள்
18. இரத்தக்குழாய் மற்றும் நரம்பு மண்டல பாதிப்பு நியூரோபதி
19. நீரிழிவு பரிசோதனைகள்
20. உயர் இரத்த அழுத்தமும், நீரிழிவும்
21. நீரிழிவு வரும் முன்னே, இதய நோய் வரும் பின்னே
22. கால் பாதுகாப்பு முறைகள்
23. தோல் வியாதிகளும் நீரிழிவும்
24. நீரிழிவும் பாலியல் குறைபாடுகளும்
25. வயிற்றையும் வாட்டும் நீரிழிவு வியாதி
26. நீரிழிவு நோயாளிகளை தாக்கும் மூட்டுவலி
27. மதுமேகமும், மனச் சோர்வும்
28. இன்சுலீன்
29. வரும் முன் காத்தல்
30. வந்த பின் காத்தல்
31. பத்திய உணவு
32. சத்துணவும் சர்க்கரை வியாதியும்
33. சர்க்கரை நோய்க்கேற்ற சில உணவு முறைகள்
34. இயற்கை உணவுகள்
35. மாதிரி உணவுப் பட்டியல்
36. மாற்று உணவுகள்
37. அரிசியும் நீரிழிவும்
38. உடல் எடையை சரியான அளவில் வைத்திருத்தல்
39. சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் யோகா
40. உடற்பயிற்சியின் நன்மைகள்
41. வாழ்க்கை நிலை மாற்றம்
42. ஆயுர்வேதமும் மதுமேகமும்
43. மூலிகைகள்
44. சித்த வைத்தியத்தில் சர்க்கரை வியாதி
45. செயற்கை சர்க்கரை – கசப்பான உண்மைகள்
46. மதுமேக சந்தேகங்கள்
47. எதிர்காலம்

இந்நூலைப் பற்றி

சர்க்கரை வியாதி புதிதாக வந்த வியாதியல்ல. கிறிஸ்து பிறப்பதற்கு சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே இந்தியர்களுக்கு தெரிந்த வியாதி. ஏன், உலகின் தொன்மையான வியாதிகளில் சர்க்கரை வியாதியும் ஒன்று. ஆயுர்வேதத்தில், சரகஸம்ஹிதையில் ப்ரமேஹா என்ற தலைப்பில், 20 சிறுநீர் கோளாறுகள் சுட்டிக் காட்டப்பட்டிருக்கின்றன. இந்த இருபதில் மதுமேஹா என்று சர்க்கரை வியாதி குறிப்பிடப்படுகிறது.

சர்க்கரை வியாதி, நீரிழிவு நோய், புற்றுநோய் அல்லது மாரடைப்பு போன்ற உயிர் கொல்லி நோயல்ல, அதை நோய் என்று சொல்வதை விட, உடலின் குறைபாடு என்றே கூறலாம். ஆனால் பல தொல்லைகளையும், வேதனைகளையும் தரும் ஒர் பெரிய, சிக்கலான குறைபாடு. இதை குணப்படுத்த முடியாது. இவ்வளவு வருடங்களாக நம்முடன் வாழ்ந்து வந்தும் இதற்கு பரிபூரண குணம் காணமுடியாமல் போவதிலிருந்தே இந்த நோயின் கடுமையை உணரலாம். ஆனால் தற்போதைய மருத்துவ கண்டுபிடிப்புகளால் இந்தக் குறைபாட்டை கட்டுபடுத்தலாம்.

நீங்கள் 40 வயதை தாண்டியவராக இருந்து, சாதாரண ஐ§ரத்திற்காக டாக்டரிடம் சென்றால் அவர் கேட்கும் முதல் கேள்வி உங்களுக்கு சுகர் உண்டா, B.P. உண்டா என்பது தான். நீங்கள் இல்லையென்றால், அவர் உங்களை ஏற இறங்க, செவ்வாய் கிரகத்திலிருந்து வந்த மனிதனை பார்ப்பது போல் பார்ப்பார் உடனே டெஸ்ட் செய்து கொள்ளுங்கள் என்பார்.

அவ்வளவு சாதாரணமாகிவிட்டது சர்க்கரை வியாதி. இந்தியாதான் தற்போது அதிக சர்க்கரை நோயாளிகள் உள்ள தேசம். இந்த புள்ளி விவரங்கள் திகைப்பூட்டுகின்றன. அதுவும் இளவயதினர் சர்க்கரை வியாதியால் பாதிக்கப்படுவது அதிகமாகிவிட்டது. சர்க்கரை வியாதியும் ஒர் பரவும் வியாதியாகிவிட்டது. டயாபடீஸ் பற்றிய விழிப்புணர்வை எல்லோருக்கும் ஏற்படுத்த வேண்டும். அப்போது தான் மனிதகுலத்திற்கு பெரும் சவாலான இந்த நோயை கட்டுப்படுத்த முடியும்.

சர்க்கரை நோயை குணப்படுத்த முடியாது. ஆனால் அதனுடன் வாழ நினைத்தால் வாழலாம். இந்த நூலில் நீங்கள் பார்க்கலாம். சர்க்கரை வியாதியைப் பற்றி சரியான தகவல்களையும் அந்நோயை எப்படி எதிர்கொள்ளலாம் என்பதனையும் தெரிந்து கொள்ளலாம்.

பக்கம் – 144

விலை ரூ. 90.00



Enquire This Product

Verify






You might also like:


Previous post:

Next post:

© 2011 - 2012 | SK Ayurveda | Disclaimer | Terms | Concept | Contact Us | To Order | Powered by Make Web Designs